சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
பல பெண்கள் வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது 

 வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம்,  செவிதாங்களை  கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (30 வயது) என்பவன் இணையதள முகநூல் வழியாக பல பெண்கள் வாழ்க்கையில் கெடுத்து சீரழித்த ஒரு காமுகன் இவன் சமீபத்தில்  கே.ஜி.எஃப்  ராபஸ்தான்பேட்டை  ஆய்வாளர் நாகராஜன்  தலைமையில்  தனிப்படை அமைத்து போலீசார் வினோத்குமார் என்பவனை தேடிவந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த வினோத்குமாரை தனிப்படை போலீசார்  கைது செய்யப்பட்டு கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப் ராபஸ்தான்ப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை  மேற்கொண்ட போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் IPC. 376, 420, 506, என்ற மூன்று பிரிவில்  வழக்குப்பதிவு செய்து கோலார் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர், மேலும் இவன் சமூக வலைதளங்களில் பேஸ்புக்கில் மூலம் பல பெண்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு பழகி அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளான் என தகவல் மேலும் கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப்பை சேர்ந்த அனிதா என்ற பெண் ஏற்கனவே அவர்  கணவரால் கைவிடப்பட்டு தனியார்  மருத்துவமனையில்  வேலை பார்த்து வந்த நிலையில் முகநூல் வழியாக அந்த பெண்ணிடம் வேலூர் மாவட்டம்,  காட்பாடி வட்டம், செவிதாங்கள் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்  என்பவன் பழகி அந்த பெண்மணியை நான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 ஆண்டுகளாக அந்த பெண்ணிடம் வினோத்குமார் பழகி தன்னுடன் சேர்ந்து மூன்றாண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளான் தற்போது அந்த பெண் எனது வாழ்க்கையை சீர் அளித்ததோடு வினோத்குமார்  என்பவன் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிய டிமிக்கி கொடுத்து நிலையில் இதை அறிந்து அனிதா என்ற அந்த பெண் கே.ஜி.எஃப் ராபஸ்தான் பேட்டை  காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதன் பேரில் கர்நாடகா மாநில, கே.ஜி.எஃப் ராபஸ்தான்பேட்டை போலீஸ் ஆய்வாளர் நாகராஜன் அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வினோத்குமாரை தேடி வந்த நிலையில் சமீபத்தில் நேற்று முன்தினம்  போலீசாரால் சென்னையில் மறைந்திருந்த வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் அனிதா என்ற பெண் கூறுகையில் நான் ஏமாந்தது போல் சமுதாயத்தில் எத்தனையோ பெண்களை சீரழித்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற காமுகன் பேர்வழிகளை இரும்பு கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு வெளியே படுத்திக்கொண்டு கண்ணீர் மல்க கூறினார்
கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசூல் வேட்டை தர்பார்
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.