தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
வேலூர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் வேலூர் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் அவர்களை இன்று மதியம் 12.30 அளவில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் முறைப்படி வழங்கவில்லை என முறைப்படி தெரிவித்தனர் முன்னதாக இருந்த மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் வாயிலாக பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்துவது தரம் பிரித்து செய்திகளை அனுப்புவது தகவல் தெரிவிப்பது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் பி.ஆர்.ஓ அம்பலூர் மோகன் மீது மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர் மேலும் அரசு சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு சலுகைகள் மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கும்படி தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் எஸ்.விநாயகம், மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ராமகோபாலன், மாவட்டச் செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட துணைச்செயலாளர் ச.விஜய், மாவட்ட துணைச்செயலாளர் ரமேஷ்பாபு, ஆகியோர் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை முறைப்படுத்தி வழங்கும்படியும் அரசால் வழங்கக்கூடிய அடையாள அட்டை வழங்கப்படும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்படியும் பத்திரிகையாளர்களை கௌரவப்படுத்திய அழைக்கப்படும் வாரம் இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ் என தரம்பிரித்து சலுகைகள் வழங்கக் கூடாது அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஒரே மாதிரி சலுகைகளை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கும்படியும் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமரவேல் பாண்டியன் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது இதை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் குமரவேல் பாண்டியன் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களை அழைத்து ஆட்சித் தலைவர் வளாகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரையும் சந்தித்து பேசினார் அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் தங்களுடைய குறைகளை தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது சலுகை விலை வீட்டுமனைப்பட்டா அதற்கான கமிட்டிகள் அமைக்கப்பட உள்ளது தாங்கள் நிறுவனம் வாயிலாக வழங்கப்பட்டுள்ள பரிந்துரை கடிதம் அல்லது அடையாள அட்டை இவை அனைத்தும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலரிடம் வாயிலாக வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார் இதன் மூலம் கமிட்டி அமைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பாரபட்சமின்றி அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் அரசு வழங்க கூடிய சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்தார் மேலும் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மிக எளிமையாக, பொறுமையாக பதில் அளித்து தங்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துக் கொண்டார் பத்திரிகையாளர்களுடன் அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்